39 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா ஸ்ருதிஹாசன்

Shruti Haasan Birthday Tamil Actress Net worth
By Bhavya Jan 28, 2025 01:30 PM GMT
Report

ஸ்ருதிஹாசன் 

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் நாயகியாக களமிறங்கியவர் ஸ்ருதிஹாசன்.

பாடகி, இசையமைப்பாளர், நாயகி என பன்முகம் கொண்ட ஸ்ருதிஹாசன் இசை துறையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக சலார் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

39 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா ஸ்ருதிஹாசன் | Shruti Haasan Net Worth

தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இன்று நடிகை ஸ்ருதிஹாசன் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

இத்தனை கோடியா

அப்பா முன்னணி நடிகராக இருந்தாலும் ஸ்ருதிஹாசன் தனது 21வது வயதில் இருந்தே வேலைகள் செய்து தன்னை பார்த்துக் கொள்கிறார்.

39 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா ஸ்ருதிஹாசன் | Shruti Haasan Net Worth

ஸ்ருதிஹாசன் தனியாக சம்பாதித்து மொத்தமாக ரூ. 80 முதல் ரூ. 90 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சொகுசு பங்களா வைத்துள்ளார். ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்துள்ளார். அவரிடம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், ஆடி க்யூ 7 போன்ற சொகுசு கார்களும் உள்ளதாம்.