காதலன் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் பார்ட்டி! ஸ்ருதிஹாசனை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழும் கமல்ஹாசனின் வாரிசாக 7ஆம் அறிவு, 3 போன்ற வெற்றிப்படங்கள் மூலம் அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தன் தந்தை படமான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் வாரணம் ஆயிரம் படத்தில் அடியே கொள்ளுதே பாடல் மூலம் பின்னணி பாடகியாகவும் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இதையடுத்து படங்கள் பாடல்கள் என பிஸியாக இருந்த ஸ்ருதி சமீபத்தில் லாபம் படத்திற்கு பிறகு எந்த தமிழ் படங்களிலும் கமிட்டாகாமல் தெலுங்கில் அப்பா வயது நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க கமிட்டாகி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வரும் டூட்டுல் கலைஞர் சாந்தனுவுடன் நெருக்கமாக இருக்கும் புகைபடங்களை வெளியிட்டு வரும் ஸ்ருதி ஹாசன், காதலர் பிறந்த நாளுக்கு நள்ளிரவில் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். படுக்ளாமராக ஆடையணிந்து காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
