எப்போ உங்களுக்கு திருமணம்!! லோகேஷ் முன்பு கமல் மகள் ஸ்ருதி ஹாசன் கொடுத்த பதில்..
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக உன்னை போல் ஒருவன் படத்தில் வானம் எல்லை என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்பாடலை தொடர்ந்து 7 ஆம் அறிவு மற்றும் 3 போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.
இதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி, சாந்தனு என்பவரை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். நடிப்பை தாண்டி இசையில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ருதி, தந்தை கமல் வரிசைகளில் இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் பாடி, நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜுடன் ரொமான்ஸ் செய்துள்ள இனிமேல் ஆல்பம் தற்போது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இனிமேல் ஆல்பம் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர் ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ். அப்போது ஒரு பத்திரிக்கையாளர், ஸ்ருதி ஹாசன் உங்களுக்கு எப்போது கல்யாணம் என்று கேட்டுள்ளார்.
அதற்கு ஸ்ருதி ஹாசன், உண்மையில் இது தான் முதல் கேள்வியா என்று சிரித்தபடி, எனக்கு தெரியல சார், சத்தியம தெரியல என்று கூறியிருக்கிறார். ரொமான்ஸ் சீனில் எத்தனை முறை டேக் வாங்கினார் என்ற கேள்விக்கு, லோகேஷ் கனகராஜ், 15, 20ன்னு வெச்சுக்கோங்க என்று கூறியுள்ளார். இந்த வீடியோ ஆல்பத்தில் முழு மனதுடன் எமோஷ்னலாக நடித்தார் என்று ஸ்ருதி ஹாசன் கூறியிருக்கிறார்.
You May Like This Video