சிவகார்த்திகேயனா வேண்டவே வேண்டாம்!! ஆணவத்தில் கமல் மகள் ஸ்ருதி ஹாசன் செய்த செயல்..
சினிமாவில் பல பிரபலங்கள் இந்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்ற முடியாது என்று வெளிப்படையான ஒரு கோட்பாட்டை வைத்திருப்பார்கள். அப்படி, இந்த நடிகருடன் நடிக்க மாட்டேன் என்று பல நடிகைகள் இருந்து வந்தனர். அந்தவகையில் நடிகை ஸ்ருதி ஹாசனும் ஒரு நடிகரை ஒதுக்கி இருக்கிறாராம். பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி ஸ்ருதி ஹாசன் பற்றி ஒரு தகவலை கூறியிருக்கிறார்.
அதில், சமீபத்தில் நான் பெரியளவில் பிரபலமாகாமல் இருக்க என் உடலில் இருக்கும் பிரச்சனை தான் காரணம் என்று ஸ்ருதி ஹாசன் கூறியிருக்கிறார். அப்படி அவர்கள் அந்த இடத்தை பிடிக்காமல் இருக்க ஒருவிதமான Attitute-ம் காரணம். அதாவது சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தில் முதலில் கமிட்டாகியது நடிகை ஸ்ருதி ஹாசன் தானாம்.
கமிட்டான பின் ஷூட்டிங் எல்லாம் ரெடியான சமயத்தில் திடீரென்று, யார் என்ன சொன்னார்களோ? சிவகார்த்திகேயன் எல்லாம் சின்ன ஹீரோ, அவரோடு எப்படி நான் நடிக்கிறது என்று பின்வாங்கிவிட்டாராம். அதற்கு காரணம் வேறொரு ஒன்றும் கூறப்பட்டது.
ஒருமுறை கமல் ஹாசன் பற்றி சிவகார்த்திகேயன் தவறாக பேசியதால், அவரை கமல் ரசிகர்கள் அடித்த விவகாரம் தான் ஸ்ருதி ஹாசன் விலகியதாகவும் கூறப்பட்டது.
அதேபோல் நடிகர் கார்த்தியின் தோழா படத்தில் நடிகை தமன்னா ரோலில் நடிக்க ஸ்ருதி ஹாசன் கமிட்டாகி 10 நாள் ஷூட்டிங் சென்றிருக்கிறார். இடையில் ஒரு ஈகோ ஏற்பட்டு ஸ்ருதி ஹாசன் விலகி பின் தமன்னாவை கமிட் செய்திருக்கிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.