அதை கேட்ட ரசிகர், மூடிட்டு போடா என்று பதில் அளித்த ஸ்ருதி ஹாசன்!!

Shruti Haasan Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 21, 2024 02:30 PM GMT
Report

 தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டு இருக்கிறார் நடிகர் ஸ்ருதி ஹாசன்.

தமிழ் சினிமாவில் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

அதை கேட்ட ரசிகர், மூடிட்டு போடா என்று பதில் அளித்த ஸ்ருதி ஹாசன்!! | Shruti Haasan Reply Fans Question

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் ரசிகர் ஒருவர் கலாய்க்கும் விதமாக, "தென்னிந்திய மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள்" என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த ஸ்ருதி, "இனவாதம் பார்வை என்பது சரி இல்லை. தென்னிந்திய மக்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் எனக்கூறுவது சரியில்லை. அது அழகானதாகவும் இல்லை. நீங்கள் எங்களை சரியாக புரிந்துகொள்ளவில்லை. இது தொடரும் பட்சத்தில் ‛மூடிட்டு போடா'' என்று தென்னிந்திய மொழியில் கூறுவேன்" என்று ஸ்ருதி ஹாசன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.