காதலிப்பது பிடிக்கும், ஆனால்! கமல் மகள் ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்
இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகள் ஆவார். சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வரும் இவர், திறமையான பின்னணி பாடகியும் கூட என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ஸ்ருதி ஹாசன் இதுவரை பல காதல் தோல்வி சந்தித்து இருக்கிறார். Michael Corsale, சாந்தனு ஹசாரிக்கா ஆகியோருடன் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது. நடிகர் சித்தார்த் உடனும் காதல் முறிவு ஏற்பட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
ஸ்ருதி ஹாசன் திருமணம் குறித்த கேள்விகளுக்கு இதுவரை பதில் அளிக்காமல் தவிர்த்து வந்த நிலையில், தற்போது அதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
"காதலிப்பது பிடிக்கும். ஆனால், இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை. திருமணத்தை பற்றி யோசித்ததில்லை. ஆர்வமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என யாருக்கு தெரியும்" என இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறியிருக்கிறார்.