இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா, அட இவரா
திரையுலக பிரபலங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், யார் இவர் என்கிற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை, நடிகர் கமல் ஹாசனின் மகளும் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசன்தான். ஆம், நடிகை ஸ்ருதி ஹாசனின் சிறு வயது புகைப்படம்தான் அது.
ஸ்ருதி ஹாசன் இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் ரசிகர்களின் மனதை இவர் தொட்டுளார்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் கூலி படம் வெளிவந்தது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து முதல் முறையாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கூட, உலகளவில் ரூ. 520 கோடிக்கும் மேல் வசூல் செய்துவிட்டது.