கடைசில இப்படியாகிடுச்சே! நடிகைஸ்ருதி ஹாசனை தனிமையில் விட்டு சென்ற காதலர்
தமிழ் சினிமாவில் உலகநாயகன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இதையடுத்து, 7ஆம் அறிவு, 3, போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வெற்றியை கொடுத்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் 10 இடத்தினை பிடித்து வந்தார்.
காதல், போட்டோஷூட் என்று இருந்த ஸ்ருதி லாபம் படத்திற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் வெப் தொடர்களில் கவனம் செலுத்து வருகிறார். டூடூல் கலைஞரான சந்தனு என்பவரை காதலித்து தனியாக ஒரே வீட்டில் இருந்து வருகிறார்கள்.
இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்து வந்தார் ஸ்ருதி. இந்நிலையில் நேற்று தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி செய்தியை வெளியிட்டார்.
இதனால் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்ட ஸ்ருதி ஹாசன் காதலரை தற்போது பிரிந்துள்ளாராம். இருவரும் ஒன்றாக இருந்து செல்ஃபி எடுக்கும் போது அவருக்கு தொற்று பரவலையா என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.