மும்பையில் ஆடம்பர அபார்ட்மெண்ட் வாங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில்!! இத்தனை கோடியா?

Gujarat Titans Indian Cricket Team Shubman Gill IPL 2026
By Edward Mar 29, 2026 07:45 AM GMT
Report

சுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஐபிஎல் குஜராத் அணியின் கேப்டனுமான சுப்மன் கில் மும்பையில் ஜூஹூ நகரில் ரூ. 20.7 கோடி மதிப்பிலான ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளாராம்.

மும்பையில் ஆடம்பர அபார்ட்மெண்ட் வாங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில்!! இத்தனை கோடியா? | Shubman Gill Purchases Luxurious Juhu Area Mumbai

மும்பையின் ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது இந்த ஒப்பந்தம். அதாவது ஜூஹூ தாரா சாலையில் கட்டப்பட்டு வரும் பூஜா லூமினெயர் அப்பார்ட்மெண்டில் 12வது தளத்தில் இந்த சொகுசு பிளாட் அமைந்துள்ளது.

இந்த சொத்துக்காக ரூ. 1.24 கோடியில் முத்திரைக் கட்டணமாக செலுத்தி வாங்கியுள்ளார். ஒரு சதுர அடிக்கு ரூ.61,442 என்ற விலை என்ற இந்த ஒப்பந்தம் ஜூஹூவின் ப்ரீமியர் குடியிருப்புப் பகுதியில் நிலவும் தற்போதைய சந்தை விலைக்கு இணையாகவுள்ளது.

மும்பையில் ஆடம்பர அபார்ட்மெண்ட் வாங்கிய இந்திய கேப்டன் சுப்மன் கில்!! இத்தனை கோடியா? | Shubman Gill Purchases Luxurious Juhu Area Mumbai

இங்கு திரைப்படத் தயாரிபாளர் வாசு பக்னானி மற்றும் அவரது மகன் ஜாக்கி பக்னானி நிர்வகிக்கும் பூஜா லீஷர் அண்ட் லைஃப்டைல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. 16 மாடிகளை கொண்ட லூமினெயர் திட்டம் 2029ல் நிறைவடையவுள்ளது.