திருமணமாகாமல் இரு பெண்களுக்கு தாயான பிரபல நடிகை! 46 வயது நடிகை வெளியிட்ட மேக்கப் வீடியோ
மாடலிங் துறை இருந்து1994ல் முதல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய பெண் என்ற பெருமை பெற்றவர் நடிகை சுஷ்மிதா சென். உலகழகியாக தேர்வு செய்யப்பட்டு பிரபலமான சுஷ்மிதா டஸ்டக் என்ற பாலிவுட் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார்.
இதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து சூப்பர் ஹிட்டும் கொடுத்து வந்தார். தமிழில் முதல்வன் படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு ஆடியும் இருந்த சுஷ்மிதா தற்போது 46 வயது எட்டியும் திருமணமாகாமல் இருந்து வருகிறார்.
ஆனால் திருமணமாகாத சுஷ்மிதா சென் இரு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது இருவரும் வளர்ந்து அம்மாவிற்கு டஃப் கொடுக்கும் படியான சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்கள்.
சமீபத்தில் தன்னைவிட 15 வயது குறைவான நடிகர் ரோமன் சாவ்ல் என்பவருடன் ரிவ்விங் டு கெதரில் வாழ்ந்து வந்தார். மகள்களின் சம்மதத்துடன் இருவரும் ஒன்றாக இருந்து வந்தார்கள்.
ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய ஆண் நண்பரை பிரிந்துவிட்டதாக சுஷ்மிதா சென் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி வீடியோக்களையும் போட்டோஷூட் புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார். தற்போது மேக்கப் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இன்றோடு சுஷ்மிதா சென் உலக அழகி பட்டத்தை பெற்று 28 வருடங்களை கடந்துள்ளது. இதற்கு பல நட்சத்திரங்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.