ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நடிகர் திடீர் மரணம்!

By Parthiban.A Nov 11, 2022 12:25 PM GMT
Report

நடிகர்கள் பொதுவாகவே உடலை பிட் ஆக வைத்துக்கொள்வதற்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். சில நடிகர்கள் அதற்காகவே அதிகம் நேரத்தை செலவிடுவதுண்டு.

தற்போது பிரபல ஹிந்தி சீரியல் நடிகர் சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே உயிரிழந்து இருக்கிறார்.

மாரடைப்பு

46 வயதாகும் அவர் Kkusum, Waaris, Suryaputra Karn உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கிறார். அவர் மும்பையில் இருக்கும் ஜிம் ஒன்றில் ஒர்கவுட் செய்துகொண்டிருக்கும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.

அவரை Kokilaben மருத்துவமனைக்கு கொண்டுசென்றாலும் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். Oshiwara போலீசுக்கு இது பற்றிய தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வந்து அவ்ரது மரணம் பற்றி விசாரித்து வருகிறார்கள்.

சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.