அந்த நடிகரால் ஆடையின்றி ஓடி செத்தே போயிருப்பேன்!! பல ஆண்டு உண்மையை உடைத்த சித்தார்த்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சித்தார்த் பல ஆண்டுகள் கழித்து டக்கர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பாய்ஸ் படத்தில் கதாநாயகியை கவர நிர்வாணமாக ரோட்டில் ஓடும் காட்சி இருக்கும்.
அந்த காட்சியின் போது உள்ளாடை இரண்டு விதவிதமாக அணிந்து நடித்தேன். அப்படி பேண்ட்-ஐ கழட்டும் போது கதாநாயகியின் அம்மா ஷாக்காகி கத்திவிட்டார். ஆனால் உசாராக நான் உள்ளே வேறொரு உள்ளாடை போட்டிருந்தேன் என்று கூறினார்.
மேலும் அந்த காட்சியில் நடிகர் நகுல் பைக்கில் என்னை ஏற்றிச்செல்வான். நான் பாய்ஸ் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்ததால், அந்த காட்சியில் 20கிலோ மீட்டர் வேகத்தில் தான் நகுலை பைக்கை ஓட்டச்சொன்னேன்.
ஏனென்றால் ஒரு ஆட்டோ எங்களுக்கு மேல் போகும் காட்சி. ஆனால் நகுல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதால் அந்த ஆட்டோவின் டயர் என் தோல்பட்டையை தட்டியதால் அடிபட்டது.
அதன்பின் 20 கிலோ மீட்டருக்கு மேல் போகாதனு சொல்லியில் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதால் பைக் கீழே விழுந்து என் கால் முழுவதும் அடி. அந்த சீனில் நான் விழுந்து செத்து இருப்பேன். யாராவது அந்த அடியின் தழும்பு பற்றி கேட்டால் அம்மணமா ஓடி அதான்னு சொல்லுவேன் என்று சித்தார்த் காமெடியாக பகிர்ந்துள்ளார்.