ஒரு நாளைக்கு 1000 சம்பளம்..அந்த சீனில் நடிச்சி இன்னும் அதை பார்க்கல!! நடிகை பிரியங்கா..
நடிகை பிரியங்கா
சினிமாப் படங்களில் சிறுசிறு ரோலில் நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பிரியங்கா.
முன்னணி நடிகர்கள், காமெடி நடிகர்களுடன் நடித்த பிரியங்கா, சிறு வயதில் கிளாமர் ரோல்களில் நடித்தது குறித்து சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதில், ஜோடி படத்தில் ஆட்டோ காட்சியில் நடித்தேன். ஆனால், அந்த சீசனை பார்க்கக்கூடாது என்று இருந்தேன். அந்த சீனை இன்னும் பார்க்கவில்லை.
ஆட்டோவில் பிரசாந்தை இடிக்கும் காட்சியை அப்போது எனக்கு என்னவென்றே தெரியாமல் தான் அந்த காட்சியில் நடித்தேன்.
என்னை திட்டுவார்களோ, அவர்கள் சொன்னதை செஞ்சோமா? வீட்டுக்கு போனோமான்னு பயந்துதான் நடித்தேன். என்னிடம் ஸ்பாட்டில் தான் சொன்னார்கள்.
அப்போதைய காலக்கட்டத்தில் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் இல்லன்னா 2000 தான் சம்பளமாக கொடுப்பார்கள். அப்போது ஆடிஷன்லாம் கிடையாது, செலன்ஷன் தான் இருக்கும் என்று காமெடி கலந்து பதிலை கொடுத்திருக்கிறார் நடிகை பிரியங்கா.