ரூ. 2900 கோடி சொத்து மதிப்பு!! புல்லட் ப்ரூஃப் அறையில் இருந்து வெளியே வந்த சல்மான் கான்..
சல்மான் கான்
பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சல்மான் கான், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்துள்ளார், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸான சிக்கந்தர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.
ஆனால் ஒருசில சிக்கந்தர் படம் பார்க்க வேண்டாம் என்று சிலர் கருத்துக்களை கூறி வருகிறார்கள். படம் ரிலீஸாகி 3 நாட்களான நிலையில் வெறும் ரூ. 61.88 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது.
புல்லட் ப்ரூஃப் அறை
இந்நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பாலிவுட் நடிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தை சல்மான் கான் தனது வீட்டில் வழங்கியிருக்கிறார்.
அதேபோல் தனது ரசிகர்களையும் சந்திக்க நினைத்த சல்மான் கான், பாதுகாப்பு காரணமாக புல்லட் ப்ரூஃப் கொண்ட கண்ணாடி ரூமில் இருந்து ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு கையசைத்து ரம்ஜான் வாழ்த்துக்கலை தெரிவித்துள்ளார். அவரின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Shukriya Thank you aur sab ko Eid Mubarak! pic.twitter.com/EaW0CeaZWi
— Salman Khan (@BeingSalmanKhan) March 31, 2025