சிம்புவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இப்படியொரு தீராத பிரச்சனை!! என்ன விஷயம் தெரியுமா?..

Silambarasan Actors Tamil Actors
By Dhiviyarajan May 30, 2024 05:45 PM GMT
Report

தமிழ் நாட்டில் தனக்கு ஒரு ரசிகர் படையை வைத்து இருக்கிறார் சிம்பு. சினிமாவை தாண்டி இவர் நடிகைகளுடன் கிசுகிசு மற்றும் சில சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

சமீபகாலமாக சிம்பு, வாரிசு நடிகை திருமணம் செய்கிறார் என்றும் தொழில் அதிபரின் மகளுடன் திருமணம் என்றும் தகவல்வந்துகொண்டு இருக்கிறது. இது தொடர்பாக பேசிய சிம்பு தரப்பினர் இந்த திருமணம் செய்திகள் எல்லாமே வதந்தி என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சிம்புவை போலவே கீர்த்தி சுரேஷ்க்கும் இந்த பிரச்சனை இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் அவரது நண்பரை திருமணம் செய்ய போகிறார், தொழில் அதிபரை திருமணம் செய்ய போகிறார் என்று தொடர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். கீர்த்தி சுரேஷ், சிம்பு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இது போன்ற செய்திகளை யார் பரப்பி வருகிறார்கள் என்று தெரியவில்லை.   

சிம்புவுக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் இப்படியொரு தீராத பிரச்சனை!! என்ன விஷயம் தெரியுமா?.. | Simbu And Keerthy Suresh Have Problems