தனுஷை நேரடியாகவே தாக்கிய சிம்பு! ரொம்ப தைரியம் தான்
கோலிவுட்டில் பொதுவாகவே நடிகர்கள் இடையே எப்போதும் போட்டி இருந்துகொண்டே தான் இருக்கும். ரஜினி-கமல், விஜய் - அஜித் மற்றும் அவர்களை தொடர்ந்து சிம்பு - தனுஷ் என ஒருகாலத்தில் போட்டி இருந்தது.
சிம்பு vs தனுஷ்
ஆனால் சிம்பு சில காலம் தடுமாறி செல்ல, அந்த நேரத்தில் தனுஷ் உச்சத்தை தொட்டுவிட்டார். அவர் பாலிவுட், ஹாலிவுட் என படங்கள் நடித்து கொண்டிருக்கிறார்.
தற்போது சிம்புவும் மாநாடு படத்தை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக பெரிய கம்பேக் கொடுத்து இருக்கிறார்.

தாக்கி பேசிய சிம்பு
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சிம்பு தனுஷை மறைமுகமாக தாக்கி பேசி இருக்கிறார்.
"எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் உன்னை விட உயரத்தில் யாராவது இருப்பார்கள். நான் ஹாலிவுட்டே சென்று நடித்தாலும்.. அடுத்து என்ன?"
தற்போது சிலர் அதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், பெரிய ஆள் ஆகிவிட வேண்டும் என்று. நம் வேலையை perfect ஆக செய்யும் ஒருவர் தான் பெரிய ஆள் என நான் நினைக்கிறேன்" என சிம்பு கூறி இருக்கிறார்.
