சோக செய்தி! முக்கிய நபர் மரணம்! சிம்புவை கவலையில் ஆழ்த்திய சம்பவம்! இறுதி சடங்கு!
father
dead
susthiran
By Jon
சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் பண்டிகை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில் இப்பட இயக்குனர் சுசீந்திரனின் தாயார் ஜெயலட்சுமி மரணமடைந்த செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டிய நாடு படங்களை இயக்கிய சுசீந்திரன் தேசிய விருது பெற்றவர். சுசீந்திரனின் சகோதரர் சரவணன் தன் தந்தை நல்லு சாமியின் பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர்களின் அம்மா ஜெயலட்சுமி திடீர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் இயற்கையை எய்தியுள்ளார்.
இறுதி சடங்கும் உடல் தகனமும் பழநி அருகே ஒட்டன்சத்திரத்தில் நடைபெறுகிறதாம், திரைத்துறை சார்ந்த பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.