சிம்புவுக்கு திருமணமா? வில்லி நடிகையுடன் காதல் கிசுகிசு
Silambarasan
S Varalakshmi
By Parthiban.A
நடிகர் சிம்பு 40 வயதாகும் நிலையிலும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தான் இருக்கிறார். பல்வேறு நடிகைகள் உடன் அவர் காதல் கிசுகிசுக்களில் இதற்கு முன்பு சிக்கி இருக்கிறார்.
அந்த நடிகைகள் எல்லாம் தற்போது திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் சிம்பு சிங்கிளாக தான் இருந்து வருகிறார். திருமணமே வேண்டாம் என இருந்த பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் கூட திருமணத்தை அறிவித்துவிட்டனர்.
திருமணமா?
இந்நிலையில் சிம்பு பற்றி ஒரு புது கிசுகிசு பரவி வருகிறது. அவர் பிரபல ஹீரோவின் மகள் ஒருவருடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அவரும் நடிகை தான். அந்த நடிகையின் முதல் படமே சிம்பு உடன் தான் நடித்தார்.
வில்லி உள்ளிட்ட மிரட்டலான ரோல்களில் நடித்துவந்த அந்த நடிகை உடன் சிம்பு காதலில் இருப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.