கடைசில இப்படி ஆகிடுச்சே! நிதி அகர்வாலால் நின்றுபோன டாக்டர் சிம்பு திருமணம்?

Nidhhi Agerwal rumour simbudrsimbu
By Edward Jan 14, 2022 07:30 AM GMT
Report

சர்ச்சைக்கு பேர் போன நடிகராக இருந்து சினிமாவே ஒதுக்கும் அளவிற்கு தள்ளப்பட்டவர் நடிகர் சிம்பு. சமீபத்தில் மாநாடு படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார்.

இதையடுத்து சில படங்களில் நடித்து வரும் சிம்பு நடிகை நிதி அகர்வால் உடன் லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் எனவும், விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் எனவும் கிசுகிசு சமீபத்தில் பரவியது.

வழக்கம்போல சிம்பு இது பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை. ஆனால் செய்தி காட்டுத்தீ போல பரவி வருகிறது. சிம்புவுக்கு டிஆர் மற்றும் உஷா இருவரும் பெங்களூரில் ஒரு பெண் பார்த்து வைத்திருந்தார்களாம்.

நிச்சயதார்த்தமும் விரைவில் நடப்பதாக இருந்தது என்றும், தற்போது நிதி அகர்வால் உடன் சிம்பு இருப்பதாக வந்த கிசுகிசுவால் அவர்கள் ஷாக் ஆகி இந்த சம்பந்தமே வேண்டாம் என யோசிப்பதாக தற்போது தகவல் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனால் டிஆர் மற்றும் குடும்பம் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.