இரண்டு பாலிவுட் நடிகைகளுக்கு வலை வீசும் சிம்பு.. அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது

Silambarasan Janhvi Kapoor Kiara Advani
By Kathick May 21, 2024 01:30 PM GMT
Report

சிம்பு தற்போது கமலுடன் இணைந்து தக் லைப் படத்தில் நடித்து வருவதை நாம் அறிவோம். இதை தவிர STR 48 திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறதாம். படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்கின்றனர். சிம்புவிற்கு இப்படத்தில் ஜோடியாக நடிக்கப்போவது யார் என இதுவரை அறிவிக்கவில்லை.

இரண்டு பாலிவுட் நடிகைகளுக்கு வலை வீசும் சிம்பு.. அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது | Simbu New Movie Actress Name

இந்த நிலையில், லேட்டஸ்ட் தகவலின்படி இப்படத்தில் சிம்புவிற்கு இரண்டு ஜோடிகள் என்றும் இருவருமே பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் வேறு யாருமில்லை நடிகைகள் கியாரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் தான்.

இதில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கியாரா அத்வானி கடந்த ஆண்டு தனது காதலரை கரம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டு பாலிவுட் நடிகைகளுக்கு வலை வீசும் சிம்பு.. அதில் ஒருவருக்கு திருமணமாகிவிட்டது | Simbu New Movie Actress Name