விவாகரத்துக்காக கடந்த கால காதலியின் கணவருக்கு போன் செய்த சிம்பு.. மன்மத லீலை ஆரம்பம்
தொடர்ந்து சில மாதங்களாவே சமூக வலைத்தளத்திலும், ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது, நடிகர், நடிகைகளின் விவாகரத்து குறித்து தான். அதிலும், தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து பெரும் பரபரப்பை திரை உலகில் ஏற்படுத்தியது.
ஆனால், இது விவாகரத்து இல்லை என்றும் கணவன் மனைவி சண்டை தான், விரைவில் இருவரும் இணைந்து விடுவார்கள் என்றும் தகவல் வெளிவந்துகொண்டு இருக்கிறது. இருவரும் இணையவேண்டும் என்றும் தான் அனைவரும் ஆசை படுகிறார்கள். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இணையவேண்டும் என்று பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், நடிகர் தனுஷுக்கு போன் கால் செய்து பேசியுள்ளாராம் சிம்பு. நீங்கள் இருவரும் பிரிய கூடாது. உங்கள் இரு பிள்ளைகளுக்காகவாது நீங்கள் மீண்டும் இணையவேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளாராம் சிம்பு. தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்திற்கு முன், சிம்புவும் ஐஸ்வர்யாவும் காதலித்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.