சிம்புவின் ஆசைக்கு ஆப்பு! ஏமாற்றத்தில் ரசிகர்கள்..
தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பின் மாநாடு படத்தால் பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுத்தவர் சிம்பு. பல பிரச்சனைகளை கலந்து மீண்டும் தன் இடத்தினை பிடித்த சிம்புவின் மாநாடு 100 கோடியை தாண்டி சமீபத்தில் வெற்றி விழாவையும் கொண்டாடினர்.
வெற்றி விழாவிற்கு சிம்பு வரவில்லை என கேள்விகள் பல எழுந்தது. அதற்கு காரணம் சிம்பு தயாரிப்பாளரிடம் கொடுத்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிம்பு நேரடியாக ரசிகர்களுக்கு நன்றி கூற வேண்டும் என ஒரு விழாவிற்கு ஜனவரி 6ல் திட்டமிடப்பட்டது.
ஆனால் அந்த விழா ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பால் தள்ளி வைக்கப்பட்டது என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் சிம்புவை பார்க்க முடியாத ஆதங்கத்தில் உள்ளனர்.
தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.