அஜித்தை நம்பவைத்து ஏமாற்றிய நடிகை! இந்த இயக்குனர் தான் காரணமா?

ajith simran ajithkumar vaali uyire
By Edward Jan 03, 2022 10:50 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் 90ஸ் கிஸ்ட்களின் கனவுக்கன்னியாகவும் இருந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி நடிகையாக ஆரம்பத்தில் பல படங்களில் நடித்து வந்த சிம்ரன் நடிகர் அஜித்தின் வாளி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது சில காரணங்களால் பொய் கூறி ஏமாற்றியுள்ளார்.

இதனால் வாளி படத்தின் படப்பிடிப்பு பலமுறை தள்ளிப்போனது என அப்போதே செய்திகள் வெளியாகியது. இதற்கு முக்கிய காரணம் என்ன என்று பிரபல சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

ஒரு நாள் சிம்ரன் வாளி பட படப்பிடிப்பில் அழுத வண்ணம் இருந்துள்ளார். இதனை பார்த்த நடிகர் அஜித் என்ன என்று அவரை கேட்க, அதற்கு சிம்ரன் மணிரத்னம் படமான உயிரே [தி சே] படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க என்னை கூப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் டேட்டால் என்னால் செல்ல முடியாத சூழலாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சிம்ரன். தன்னால் மற்றவரின் கேரியர் வீணாக்கூடாது என்பதற்காக வாளி படக்குழுவினரிடம் சிம்ரனுக்கான டேட்டை மாற்றி அமைக்க கேட்டு பேசியுள்ளார்.

ஆனால் இந்த சம்பவம் பொய் என்றும் அதற்கு பதிலாக வேறொரு படங்களில் நடித்து வந்துள்ளார் சிம்ரன். இதனால் கோபமடைந்த படக்குழு ஏன் இப்படி செய்தீர்கள் எங்கள் படம் என்னா ஆகும் என கேட்டு கால்ஷீட் பெற்றுள்ளனர். இந்த உண்மை பல ஆண்டுகளுக்கு பிறகு கசிந்துள்ளது.