எல்லாத்துக்கும் பாலிவுட்டில் பேரம் பேசுவார்கள்..மரியாதையே இருக்காது!! நடிகை சிம்ரன் ஓபன் டாக்..
தென்னிந்திய சினிமாவில் எவர் கிரீன் நடிகையாக திகழ்ந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக விளங்கிவார் தான் நடிகை சிம்ரன். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த சிம்ரன் தற்போது கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

சிம்ரன் - பாலிவுட்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், எனக்கு பலமுறை பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் நான் ஒரு படத்தில்கூட நடிக்கவில்லை. ஏனென்றால், அந்த மக்களுக்கு என்னால் ஒன்றிப்போக முடியவில்லை.
இந்த படங்களில் நடிப்பதற்கு முன் தெற்கில் நாங்கள் நடித்த படங்களையும், அவர்களின் பாரம்பரியத்தையும் அவர்கள் பார்பது இல்லை. இந்த விஷயம் என்னை மிகவும் பாதித்தது. அங்கு மரியாதை என்பதே கிடையாது.

என் வாழ்நாளில் பாதிக்கும் மேலான காலத்தை நான் சினிமாவுக்காக கொடுத்திருக்கிறேன். அப்படி இருந்தும் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்.
சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்குமிடம், என்னுடன் பயணிக்கூடிய ஊழியர்களின் எண்ணிக்கை, உங்களுடன் இத்தனை பேர் வரக்கூடாது என அடிப்படை வசதிகளில் கூட பேரம் பேசுவார்கள். அதுமட்டுமில்லாமல் ஹோட்டல்கள், டிக்கெட்டுகளில் பேரம் பேசுவார்கள்.
இந்த விஷங்யங்கள் என்னை மிகவும் பாதித்தது. ஆனால் இதுவரை இதுபற்றி யாரும் பேசியதில்லை. இப்படிப்பட்ட காரணங்களால் தான் அங்கு வேலை செய்ய வேண்டும் என்று தோன்றவில்லை என்று சிம்ரன் கூறியிருக்கிறார்.