16 வயசு பையனுடன் உறவு வைக்கும் கதை!! சிம்ரனுக்கே தெரியாமல் இயக்குனர் செய்த வேலை...
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். பல சர்ச்சைகளில் ஆரம்பத்தில் இருந்தே சந்தித்து வந்த சிம்ரனுக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் திணறி இருந்தார். அப்போது இயக்குனர் ஏ என் ராஜகோபால் இயக்கத்தில் நடிகை ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான படம் தான் கிச்சா வயசு 16.
இப்படத்தில் டீச்சர் ரோலில் நடித்திருப்பார் சிம்ரன். ஆனால் படத்தின் கதையை சிம்ரனிடம் கூறும் போது வேறுமாதிரியாகவும் படத்தினை எடுக்கும் போது வேறுமாதிரியான படமாகவும் எடுத்துள்ளார்.
ஆனால் படத்தில் 16 வயசாகும் மாணவன், ஆசிரியையான தன்னை ஒருதலைபட்சமாக காதலிப்பது போன்றும், அது தகாத உறவை வளர்த்துக்கொள்ள விருப்படுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. பள்ளி மாணவனாக நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் அவருடன் சிம்ரன் ஒரு ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.
ஆசிரியை என்று படத்தில் ஒப்பந்தம் செய்து ஆனால் மோசமான கதையுடன் எடுத்துவிட்டார்கள் என்று சிம்ரன் பாதியிலேயே கழண்டு கொண்டுள்ளார். ஆனால் சிம்ரனின் பழைய திரைப்பட காட்சிகளை வைத்து பேட்ச் ஒர்க் செய்து படத்தினை வெளியிட்டுள்ளார் இயக்குனர்.
இதுகுறித்து அறிந்த சிம்ரன் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடிகர் சங்கத்தில் புகாரளித்தார். ஆனால் சிம்ரன் கொடுத்த புகார் என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.

