அன்று சிம்ரன் இன்று ராஷ்மிகா, கத்ரினா!! இனிமேல் நடிகைகளை அப்படி செய்தால் இதான் நடக்கும்..
நவீன உலகில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு நன்மைகளை கொடுக்கிறதோ இல்லை, தீமையையும் கொடுத்து வருகிறது. அப்படி பெண்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படங்கள் வீடியோக்களை AI தொழில்நுட்பத்தின் மூலம் எடிட் செய்து இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுகிறார்கள்.
அந்தவகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தோடு வெளிநாட்டு மாடலின் வீடியோவில் எடிட் செய்து வைரலாக்கினர். இதற்கு கடும் கண்டனத்தை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கொடுத்து வந்தனர்.

இது முன்பே ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்ட தமன்னாவில் இருந்து துவங்கியது. தமன்னாவின் முகத்தை எடிட் செய்து நடிகை சிம்ரன் முகத்தை வைத்து வீடியோவை வைரலாக்கினர். அதை நடிகை சிம்ரனும் ஆதரவு செய்து நன்றி தெரிவித்தார்.
ஆனால் இது ராஷ்மிகா விசயத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மத்திய அரசு இதற்கான ஒரு தண்டனைகளை அறிவித்துள்ளது.
ஒருவரை தவறாக சித்தரித்து பதிவிட்டால் 3 ஆண்டுகள் சிறையும் 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் இதுபற்றிய புகார் வந்தால் 24 மணிநேரத்தில் அந்த படம் வீடியோ நீக்கபட வேண்டும் என்றும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து நடிகை கத்ரினா கைஃபின் AI வீடியோவும் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video