அஜித்துக்கு இது தேவையா? பணம் செய்யும் வேலை.. பாடகி கருத்து, கடுப்பான ரசிகர்கள்
அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் ரிலீஸ் செய்வதற்கு தயாராக உள்ளது.
தற்போது கார் ரேஸ் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அஜித் குறித்து பாடகி சுசித்ரா பேசிய விஷயம் அஜித்குமார் ரசிகர்களை கோபமடையச் செய்துள்ளது.
பாடகி கருத்து
அதில், " வயதான காலத்தில் அஜித்குமாருக்கு இது எல்லாம் தேவையா? சினிமாவில் நடனம் ஆட முடியவில்லை, சண்டைக் காட்சிகளில் சரியாக நடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் உடல் வலிமை கொண்ட நபர்கள் பங்கேற்கும் கார் ரேஸில் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? இப்போது எனக்கு விஷாலைப் பார்த்தால் பாவமாக இல்லை, அஜித்குமாரைப் பார்த்தால் தான் பாவமாக உள்ளது.
இது எல்லாம் பணம் செய்யும் வேலை, ஷாரூக்கான் எப்படி அவரிடம் உள்ள பணத்தை கிரிக்கெட்டில் கொண்டுபோய் கொட்டுகின்றாரோ. அதேபோல், அஜித் தன்னிடம் இருக்கும் பணத்தை கொண்டு கார் ரேஸில் கொட்டுகின்றார்" என கூறியுள்ளார்.