மூளையில் ரத்த கசிவு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாம்பே ஜெயஸ்ரீ
Tamil Cinema
By Yathrika
பாம்பே ஜெயஸ்ரீ
சமீபத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசைக் கச்சேரி நடந்தது. அதில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது அவரைப் பற்றி சோகமான விஷயம் வந்துள்ளது.
அதாவது திடீர் என உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கியுள்ளார். சுயநினைவை இழந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மூலையில் ரத்த கசிவு ஏற்பட்டு, கோமா நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.