காதலை ஏற்காத பாடகி சின்னப்பொண்ணு..தற்கொலை செய்ய முயன்ற கணவர்!! காதல் ரகசியம்...
சின்னப்பொண்ணு
தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைஞராக இருந்து பாடகியாக பல பாடல்களில் பாடி வரும் சின்னப்பொண்ணு, தற்போது நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியொன்றில், ஒருமுறை நாட்டுப்புற நலவாரிய பணிகளை முடித்துக்கொண்டு தஞ்சை திரும்பியபோது பெரிய கார் விபத்தில் சிக்கி பயங்கர காயம் ஏற்பட்டது. அதிலிருந்து எப்படி வெளியே வந்தது, விபத்து குறித்து கனிமொழி அக்கரையோடு பார்த்துக்கொண்டது வரை பகிர்ந்திருந்தார்.
வேறொரு பேட்டியொன்றில் சின்னப்பொண்ணுவின் கணவர், நாங்கள் காதலித்து தான் திருமணம் செய்தோம். என் அம்மா இறந்தப்பின் தான் அவர்களை பார்த்து காதலிப்பதாக கூறினேன். அதன்பின் எங்க வீட்டுக்காரங்க முன்னாடி ஒரு வீட்டின் சமையல் அறையில் தான் தாலி கட்டினேன் என்று கூறினார்.
எனக்கு கல்யாணம் ஆக போதுன்னு தெரிஞ்சு ஒரே அழுகை. நான் ஓகே சொல்லவில்லைன்னு, என்னை கல்யாணம் செய்யவில்லை என்றால் செத்து போயிடுவேன்னு மிரட்டினார், கடலுக்கு சென்று தற்கொலைக்கே போய்விட்டாரு. அதை கேள்விப்பட்டதும் நானே ஓடி நான் தான் காப்பாத்தினேன் என்று சின்னப்பொண்ணு தெரிவித்துள்ளார்.
