உங்கள் ரேட் என்ன? அசிங்கமாக நடந்துகொண்ட தொகுப்பாளர்!! செருப்பால் அடித்த பிரபல பாடகி..

Viral Video Bollywood Bihar
By Edward Feb 25, 2026 09:45 AM GMT
Report

பாடகி நிஷா உபாத்யாய்

போஜ்பூரி திரையுலகில் கடந்த 2016ல் தன்னுடைய 26 வயதில் பாடகியாக அறிமுகமாகினார் பாடகி நிஷா உபாத்யாய். அவர் குரலில் லேல் லே ஆயே கோகா கோலா, நவ்கர் மந்திர, பியார் மே ஹோயி பத்னானி என பல பாடல்கள் பாடி சூப்பர் ஹிட்டாகியது. சினிமா பாடல்கள் மட்டுமில்லாமல் பக்தி மற்றும் நாட்டுப்புறப் பாடல்களையும் பாடி பிரபலமானார்.

உங்கள் ரேட் என்ன? அசிங்கமாக நடந்துகொண்ட தொகுப்பாளர்!! செருப்பால் அடித்த பிரபல பாடகி.. | Singer Nisha Upadhyay Hits Host With Slipper Video

நிஷா உபாத்யாய் கடந்த 2023ல் ஒரு பொது நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார். அதில் அவரது காலில் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தார். அந்த இக்கட்டான சூழலில் இருந்தும் மீண்டு வந்து தற்போது மீண்டும் மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.

உங்கள் ரேட் என்ன?

இந்நிலையில், பீகார் மாநிலம் சாராண் மாவட்டத்தில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் பாடகி நிஷா உபாத்யாய் பங்கேற்று பாடினார். தன்னுடைய அசத்தலான குரலால் ரசிகர்களை அவர் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தபோது, அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், நிஷாவிடம் உங்கள் ரேட் என்ன என்று நேரடியாக கேட்டுள்ளார்.

உங்கள் ரேட் என்ன? அசிங்கமாக நடந்துகொண்ட தொகுப்பாளர்!! செருப்பால் அடித்த பிரபல பாடகி.. | Singer Nisha Upadhyay Hits Host With Slipper Video

இதைக்கேட்டு மேடையிலேயே கோபப்பட்ட நிஷா, உடனடியாக தன்னுடைய செருப்பை கழற்றி தொகுப்பாளரை தாக்க முயன்றிருக்கிறார். அங்கிருந்தவர்கள் தடுத்த போதிலும் நிஷாவின் ஆவேசம் குறியாமல் தொகுப்பாளரை மேடையிலேயே கடுமையாக கண்டித்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவ, அந்த தொகுப்பாளர் நிஷா ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவு சம்பளமாக பெறுகிறார் என்று கேட்கத்தான் நினைத்திருக்கிறார். ஆனால் அவசரத்தில் வார்த்தை தடிக்க உங்கள் ரேட் என்ன என்று கேட்டதுதான் கலவரத்திற்கு காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது.