காலம் எனக்கு ஆப்பு வெச்சுடுச்சி..ஒருவர் செய்த செயல்தான்!! ராஜலட்சுமி உருக்கம்..
பாடகி ராஜலட்சுமி
சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பாடகி ராஜலட்சுமி, சமீபத்தில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசியபோது, ஒரு கிராமிய பாடலை தன்னுடைய தங்கை பாடியதாக கூறியதாக சோசியல் மீடியாக்களில் தகவல் பரவியதாகவும், அதுவே பின் பெரிய சர்ச்சையாக மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லை, ஆனால் சிலர் நான் அப்படி சொன்னதாக பரப்ப ஆரம்பித்தார்கள். அதன்பின் மதுரையிலிருந்து ஒருவர் தன்னை பத்திரிக்கையாளர் என்று அறிமுகப்படுத்தி கொண்டு என்னை தொடர்பு கொண்டார்.
நான் என்ன சொல்கிறேன் என்பதை கேட்காமல், நீங்கள் பொய் சொல்லி பிரபலமாவதற்காக இப்படி செய்திருக்கிறீர்கள். ஆதாரம் வாங்கியிருக்கிறேன். உங்களை பற்றி செய்தி வெளியிடப்போகிறேன் என்று மிரட்டினார். அந்த நபரின் எவ்வளவோ விளக்கம் அளித்தும் அவர் கேட்கவில்லை.

காலம் எனக்கு ஆப்பு வெச்சுடுச்சி
அதன்பின் சில தனியார் செய்தி சேனல்களிலும் தன்னை குற்றம்சாட்டும் வகையில் செய்திகள் வெளியானதாக ராஜலட்சுமி தெரிவித்துள்ளார். அடுத்த நாள் காலையில் சில தொலைக்காட்சிகளில் என்னைப் பற்றிய செய்திகள் ஓடின, நான் உடனே அந்த சேனல்களுக்கு போன் செய்து, என் விளக்கத்தை ஏன் கேட்கவில்லை என்று கேட்டேன்.
ஆனால் அவர்களும் எங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறினார்கள். அந்நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் மனவேதனையில் இருந்தேன். அப்போது திடீரென ஒருவர் எனக்கு போன் செய்து, மேடம் நீங்கள் பேசியதாக சொன்ன அந்நிகழ்ச்சியை நாங்கள் முழுவதும் வீடியோ எடுத்திருக்கிறோம், அதை யூடியூப்பில் போட்டு வைத்திருக்கிறோம்.
ஆனால் பெரியளவில் யாரும் பார்க்கவில்லை, உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று அனுப்புகிறேன் என்று கூறினார். அவர் யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் அந்நேரத்தில் அவர் கடவுள் போல் வந்தார் என்று ராஜலட்சுமி தெரிவித்திருக்கிறார்.