48 வயதில் மறுமணம் செய்துகொண்ட பாடகி சுசித்ரா... கணவர் யார்
Suchitra
By Yathrika
சுசித்ரா
வானொலியில் பணியாற்றி வந்த இவர் தமிழ் சினிமாவில் பாடகியாகவும் வலம் வந்துள்ளார். என்னது இந்த பாடல்களை எல்லாம் இவர் தான் பாடினாரா என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார்.
பாடகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் இப்போதெல்லாம் அதிகம் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பல வருடத்திற்கு முன்பு சுச்சி லீக்ஸ் மூலம் நிறைய சர்ச்சையான விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
தற்போது நிறைய பேட்டிகளில் பிரபலங்கள் குறித்து பேசி வருகிறார், அது பெரிய பிரச்சனையையும் கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் பாடகி சுசிதரா தனது 48வது வயதில் ராஜா என்பவரை மறுமணம் செய்துள்ளார். விவாகரத்தான அவர் ஒரு வழக்கறிஞராம். அவரது பிள்ளைகள், அவரது அம்மாவுடன் சேர்ந்து 5 பேராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்களாம்.