ரசிகை கொடுத்த லிப்லாக்!! விளக்கம் கொடுத்த பாடகர் உதித் நாராயணன்...

Viral Video Gossip Today Tamil Singers
By Edward Feb 03, 2025 02:30 AM GMT
Report

உதித் நாராயணன்

இந்திய சினிமாவில் பல மொழிகளில் 2000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமானவர் உதித் நாராயணன். 4 தேசிய விருதுகள் பெற்ற உதித் நாராயணன், ராஞ்சனா என்பவரை திருமணம் செய்து விவாகரத்தும் பெற்றார். அடுத்த ஆண்டே தீபா என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார் உதித் நாராயணன்.

லைவ் ஷோ நிகழ்ச்சியில் ரசிகை ஒருவர் செல்ஃபி எடுக்க வந்துள்ளார். கன்னத்தில் முத்தம் கொடுக்க வந்த அந்த ரசிகையின் கழுத்தை பிடித்து உதட்டில் முத்தமிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ரசிகை கொடுத்த லிப்லாக்!! விளக்கம் கொடுத்த பாடகர் உதித் நாராயணன்... | Singer Udit Narayan Explanation Female Fans Video

விளக்கம்

69 வயதான பாடகர் உதித் நாராயணன், மகள் வயது ரசிகைக்கு இப்படியா செய்வது என்று அவரை விமர்சித்து கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்து உதித் நாராயணன், அந்த நிகழ்ச்சியில் நடந்த இடத்தில் நிறைய பேர் இருந்தார்கள். அங்கு என்னுடைய பாதுகாவலர்களும் இருந்தார்கள்.

அப்போது ரசிகர்கள் அவர்களின் கைகளை குலுக்குவதற்காக நீட்டினார்கள், சிலர் கைகளை முத்தமிட்டார்கள். இது ஏதோ உள்நோக்கத்தோடு நடந்ததாக சிலர் விமர்சித்து, இந்த பாடகர் மோசமானவன் என்று இணையத்தில் திட்டுகிறார்கள்.

எங்கள் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் மேடையில் பாடும்போது ரசிகர்கள் என்னை விரும்புகிறார்கள், அவர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று விளக்கம் கொடுத்துள்ளார் உதித் நாராயணன்.