மீனாவை விழுந்து விழுந்து கவனிக்கும் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் நடப்பது என்ன?

Tamil TV Serials TV Program Siragadikka Aasai
By Bhavya Aug 05, 2025 10:30 AM GMT
Report

சிறகடிக்க ஆசை

விஜய் டிவியில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கக்கூடிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.

கடந்த வாரம் ரோகிணியை போலீசார் கைது செய்து சென்றதை அடுத்து, போலீசிடம் பேசி முத்துவும், மீனாவும் அவரை சிறையில் அடைக்க விடாமல் தடுக்கின்றனர்.

மீனாவை விழுந்து விழுந்து கவனிக்கும் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் நடப்பது என்ன? | Siragadikka Aasai Serial Viral Promo

பின்னர் வீட்டுக்கு வரும் ரோகிணியை விஜயா எச்சரிக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் செம ட்விஸ்ட் உள்ளது.

நடப்பது என்ன? 

அதாவது, விஜயா மனசு மாறி இனி நல்ல விஷயங்கள் மட்டும் தான் செய்வேன் என முடிவெடுத்து கோவிலுக்கு செல்கிறார். அங்கு விஜயாவை சந்திக்கும் ஒரு பெண், நல்ல விஷயம் செய்பவர்களுக்கு டாக்டர் பட்டம் வாங்கித் தருவதாக கூறி இருக்கிறார்.

இதனால் டாக்டர் பட்டம் வாங்க நினைக்கும் விஜயா மீனாவுக்கு புது சேலை ஒன்றை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதுமட்டுமின்றி, மீனாவை தங்கம், செல்லம் என கொஞ்சுகிறார். இதை கண்ட குடும்பத்தினர் நம்ப முடியாமல் அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போகின்றனர்.