திருச்செல்வம் சார் என்கிட்ட நேரடியா இப்படி கேட்டாரு!! சிறகடிக்க ஆசை கோமதி பிரியா...

Edward
in TelevisionReport this article
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. நம்பர் 1 இடத்தில் பட்டையை கிளப்பி வரும் இந்த சீரியலில் மீனா ரோலில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை கோமதி பிரியா. இந்த சீரியல் வெற்றிக்கு இவருடைய கதாபாத்திரமும் ஒரு காரணமாக உள்ளது.
ஹோம்லி லுக்கில் சீரியல் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் நடிகை கோமதி பிரியா, சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் இயக்குநர் திருச்செல்வம் கையால் விருது வாங்கியது பற்றி எமோஷ்னலாக பேசியுள்ளார்.
இயக்குநர் திருச்செல்வம்
அதில் நான் திருச்செல்வம் சார் கையால் இந்த விருது வாங்குவேன் என்று நினைக்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்காக கீழே உட்கார்ந்திருக்கும் போது என்னுடன் திருச்செல்வம் சார் ரொம்ப பேசிக்கிட்டே இருந்தார். உங்களை நான் எப்படி மிஸ் பண்ணினேன்னு தெரியல என்று சொன்னார்.
பொதுவாக திருச்செல்வம் சாருடன் சீரியல்களில், தமிழ் பொண்ணுங்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் மதுரையை சேர்ந்த பெண்ணான உங்களை எப்படி நான் மிஸ் பண்ணினேன் என்று அவர் மீண்டும் மீண்டும் கேட்டது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.
அவர் இயக்கிய கோலங்கள் சீரியலில் இருந்து இப்போது எதிர்நீச்சல் சீரியல் வரைக்கும் நான் பார்த்திருக்கிறேன். அவரை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.
என்னை அவர் பாராட்டியது எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. மதுரையில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்போது விஜய் டிவியில் சின்ன சின்ன ரோலில் நடித்து கதாநாயகியாகவும் மாறியிருக்கிறேன்.
எனக்கு பெரியளவில் பிரபலம் கொடுத்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இப்போது திருச்செல்வம் சார் என்னை பாராட்டியது ஒரு பெரிய விருது எனக்கு கிடைத்தது போல் இருந்ததாக கோமதி பிரியா தெரிவித்திருக்கிறார்.