ஐஸ்வர்யா ராயிடம் பிடிக்காத குணங்கள்.. நாத்தனார் பதிலால் ரசிகர்கள் ஷாக்
ஐஸ்வர்யா ராய்
நடிகை ஐஸ்வர்யா ராய் ஹிந்தி சினிமா மட்டுமின்றி தமிழிலும் மிக பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். கடைசியாக இவர் பொன்னியின் செல்வன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இவர் பாலிவுட் முன்னணி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார்.
இந்த ஜோடி குறித்து விவகாரத்து வதந்திகள் அவ்வப்போது உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அபிஷேக் பச்சனின் அக்கா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராய் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.
நாத்தனார் பதில்
அதில், " ஐஸ்வர்யா உழைத்து முன்னேறியவர், மிகவும் தைரியமான பெண். அதுமட்டுமின்றி மிக சிறந்த தாய். இந்த குணங்கள் எனக்கு அவரிடம் மிகவும் பிடிக்கும்.
ஆனால், அவரிடம் பிடிக்காத விஷயங்களும் இருக்கின்றன. அதாவது அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாலோ, இல்லை ஃபோன் செய்தாலோ அதற்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்யவேமாட்டார். அவருக்கு தோன்றும் நேரத்தில் தான் மெசேஜோ, காலோ செய்வார்" என்று கூறியுள்ளார்.