என்னாங்க சார் உங்க சட்டம் : மோடியை வெளுத்துவாங்கிய சீத்தாராம் யெச்சூரி!
கடந்த 2008-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளவர் முக்கேஷ் அம்பானி. மிகப்பெரிய தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியின் நிறுவனத்தலைவருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 9,750 கோடி என 2021-ல் போர்ப்ஸ் பத்திரிக்கை நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் தொழில்தொடர்பாக இந்திய வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை சரியாக திருப்பி செலுத்தாமல் இருப்பதை பற்றி தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினருமான திரு சீத்தாராம் யெச்சூரி கருது தெரிவித்துள்ளார்.
அவர் "அம்பானியின் ரிலையன்ஸ் நேவல் என்னும் நிறுவனம் வங்கிகளுக்கு ரூ.12,429 கோடி கடன் தரவேண்டியிருக்கிறது ஆனால் ரூ. 800 கோடி திரும்ப பெற்றுக்கொண்டு பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்டது. அதாவது ரூ.11,629 கோடி (94%) தள்ளுபடி" என பதிவிட்டி நேரடியாக பேரக்குறிப்பிடாமல் மோடியை வெளுத்து வாங்கியிருக்கிறார்.