எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்ளாத சிறுத்தை சிவா..ட்விட்டரில் அவர் செய்த விஷயம்!

annaththe Siva
By Jeeva Nov 06, 2021 07:30 AM GMT
Report

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த தீபாவளியன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் வெளியானது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் நயன்தாரா ஜோடியாக நடித்த அண்ணாத்த திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. எனினும் படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை எனவே கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில தரப்பு மக்களுக்கு இந்த படம் சிறந்த அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் படமாக அமைந்திருக்கிறது.

சமூட ஊடங்களில் பலரும் படம் சரி இல்லை என நெகடிவ் ரிமார்க்ஸை பதிவிட்டுவரும் நிலையில் , ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கலாகிய வயதுவரம்புகளை கடந்து இருக்கும் அவரது பட்டாளங்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ரஜினியை திரையில் கானவே இந்த வயதிலும் தான் வந்திருப்பதாக சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகையாகிய வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் Retweet செய்திருக்கார் இயக்குனர் சிவா.

 

Gallery