திருமண சர்ச்சைக்கு குக் வித் கோமாளி சிவாங்கி முற்றுப்புள்ளி
Ashwin
Sivaangi
By Tony
சிவாங்கி குக் வித் கோமாளி ஒரே நிகழ்ச்சியில் ஓஹோ என்று வந்தவர்.
இவர் கையில் தற்போது பல படங்கள் உள்ளது. இந்நிலையில் சிவாங்கி குக் வித் கோமாளி அஷ்வினுடன் செய்யும் கலாட்டா தான் ரசிகர்களுக்கு பேவரட்.
அதை தொடர்ந்து பலரும் இவர்கள் இருவரும் திருமணம் ஆனது போல் போட்டோஸ் எடிட் செய்து வெளியிட, அஷ்வின், சிவாங்கியே மிக கடுமையாக அதற்கு பதிலடி தந்தனர்.
மேலும், நாங்கள் நண்பர்கள், இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று கோபப்பட்டனர். இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் சிவாங்கியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று லைவ்வில் கேட்டார்.
அதற்கு அவர், 'அதெல்லாம் கண்டிப்பாக இன்னும் 8 வருஷம் ஆகும்ப்பா' என்று கூறி அஷ்வின், சிவாங்கி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.