பசங்க என்ன ஒரு மாதிரி பாப்பாங்க! மேடையில் கதறி அரங்கை உருகவைத்த சூப்பர் சிங்கர் ஷிவாங்கி..

singer comali super sivaangi
By Jon Apr 02, 2021 10:54 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலங்களாக முன்னுக்கு வருகிறார்கள். அப்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. அதன்மூலம் பிரபலமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தன்னுடைய குரலுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளை தாண்டி இந்த இடத்திற்கு வந்ததை சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறி அழுது அனைவரையும் உருக வைத்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறியது, ஸ்கூல்ல இருந்து என்னோட இந்த குரலை வச்சி நிறைய கலாய்ச்சி இருக்காங்க.

பசங்களாம் போனா ஏ அந்த பொண்ணா ஒரு மாதிரியா கியாங் கியாங்னு பேசுமே… அப்படினு அந்த மாதிரி பார்ப்பாங்க… குக் வித் கோமாளியில் வந்தேன். சரி நாம நாமலா இருப்போம்னு நினைச்சுதான் வந்தேன். இப்போது என்னை எல்லோரும் அவங்க வீட்ல இருக்கிற ஒரு குழந்தையா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… இப்போ எங்கயாவது போனால் ஷிவாங்கி பிள்ளை. ஷிவாங்கி பிள்ளை என்று சொல்லி வயதானவர்கள் எல்லோரும் ஆசீர்வாதம் எல்லாம் பண்ணிட்டு போறாங்க என்று கண்கலங்கிய படி கூறியுள்ளார் ஷிவாங்கி.