சூப்பர் சிங்கர் சிவாங்கியின் அப்பாவா இது! அவரே வெளியிட்ட புகைப்படம்

supersinger sivaangi cookwithcomali
By Edward Sep 30, 2021 10:30 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் சினிமாவில் நல்ல ஒரு இடத்தினை பிடித்து வருகிறார்கள். அப்படியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடுவது மட்டும் இல்லாமல் மக்களை சிரிக்க வைக்கும் பாவனைகளை கொடுத்து நல்ல வரவேற்பு பெற்றார் சிவாங்கி. சூப்பர் சிங்கரில் கிடைத்த பேர் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கொடுத்த வரவேற்பு இரு மடங்காக மாறியது.

சமீபத்தில் நடந்து முடிந்த குக்வித் கோமாளி 2 சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் கோமாளிகளுக்கு நல்ல ஒரு இடத்தினை கொடுத்து பிஸியாகி வருகிறார்கள். அந்தவரிசையில் சிவாங்கி பல பாடல்களில் பாடியும் வருகிறார். கேரளாவை சேர்ந்த சிவாங்கி பிரபல பாடகி பின்னி கிருஷ்ண குமார் மற்றும் இசையமைப்பாளரும் பாடகருமான கிருஷ்ண குமாரின் மகளாவார்.

பெரும்பாலும் சிவாங்கியின் அம்மாவை பார்த்தவர்கள் சிலர் அவரின் அப்பாவை பார்த்திருக்க வாய்ப்பில்லை. தற்போது விமானத்தில் தன் மகள் சிவாங்கியுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் கிருஷ்ண குமார்.