ப்ரோ சிவாங்கி பாத்தாலே Cringe தான்? கடுப்பாகி பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் சிவாங்கி..

Sivaangi Krishnakumar Cooku with Comali
By Edward Jun 12, 2022 08:50 AM GMT
Report

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

பேசும் குரலும் பாடும் குரலுக்கும் சம்மந்தமே இல்லாமல் நடந்து கொள்ளும் அவரது குணம் தான் மக்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்றியது. அந்நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய துவக்கமாகவும் வாழ்க்கையை மாற்றியும் வைத்தது.

அப்படி புகழுடன் சேர்ந்து அவர் போடும் அண்ணன் தங்கை பாசம் முதல் அட்டாசங்கள் எல்லாமே மக்களை சிரிக்கவும் வைத்து ஈர்த்து வந்தார். சிங்கராக இருந்து காமெடி ரூட்டுக்கு சென்ற சிவாங்கி சிவகார்த்திகேயனால் அவர் நடிப்பில் வெளியான டான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

டான் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. சிவாங்கி இப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமாகி வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டார். இப்படியிருக்கையில் குக் வித் கோமாளி 3 சீசனில் கோமாளியாக இருக்கும் சிவாங்கி இந்த வாரமும் பங்கேற்றவில்லையாம்.

இதை அறிந்த சிலர் இந்த வாரமும் Cringe சிவாங்கி இல்லை என்று கையெடுத்து கும்பிடும் மீம்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். இதை பார்த்து சிவாங்கி, இல்லாத என்ன பத்தி ஹேட் பண்றதுக்கு இருக்க மத்த கோமாலிஸ் பத்தி பேசுனா சூப்பரா இருக்கும் ப்ரோ என்று கலாய்த்துள்ளார்.