அங்கங்களை பெண்கள் காட்டக்கூடாதுன்னு சொன்ன நடிகர்!! காட்டமாக விளாசிய நடிகை...
நடிகர் சிவாஜி
பிரபல தெலுங்கு நடிகர் சிவாஜி நடிப்பில் உருவாகியுள்ள தண்டோரா படம் நாளை டிசம்பர் 25 ஆம்தேதி ரிலீஸாகவுள்ளது. சில நாட்களுக்கு முன் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடிகர் சிவாஜி பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாகியது.

பெண்களின் அழகு சேலையில் தான் தெரிகிறது. அங்கங்கள் தெரியும்படி உடைகள் அணிவது பிரச்சனையை வரவழக்கும். ஹீரோயின்கள் கண்டபடி ஆடைகள் அணிந்தால் நீங்கள் தான் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.
என்னை தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம், நீங்கள் எடுத்துக்கொண்டாலும் எனக்கு பிரச்சனை இல்லை. உங்கள் அழகு சேலையில்தானே தவிர அங்கங்கள் தெரியும்படி அணியும் ஆடையில் இல்லை, சுதிரந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என்று கூறியிருந்தார்.

அனசுயா
இதுகுறித்து தொகுப்பாளினியும் நடிகையுமான அனசுயா தன்னுடைய கருத்தை காட்டமாக கூறியிருக்கிறார். அதில், யார் என்ன உடையணிய வேண்டும் என்று அவரவரின் தனிப்பட்ட விருப்பம். ஆடை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், சிவாஜியின் மனநிலையை பார்த்து நான் பரிதாபப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் தொகுப்பாளினி அனசுயா.