பாலா படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி கணேசன்! இப்படி ஒரு காரணமா சொன்னார்?
சிவாஜி கணேசன் தான் தமிழ் சினிமாவில் நடிப்புக்கு அடையாளமாக தற்போதும் மக்கள் மனதில் நினைவில் இருப்பவர். அவர் வயதான பிறகு பல முக்கிய நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.
அப்படி அவர் நடித்த படையப்பா உள்ளிட்ட படங்கள் பெரிய ஹிட் ஆகவும் ஆகி இருக்கின்றன. இந்நிலையில் தற்போது அவர் பாலா இயக்கிய படத்தில் நடிக்க முடியாது என மறுத்து இருக்கும் விஷயம் வெளியாகி இருக்கிறது.
சூர்யா நடிப்பில் பாலா இயக்கிய நந்தா படத்தில் நடிக்க தான் சிவாஜியை அணுகி இருக்கின்றனர். கதையையும் ரோல் பற்றியும் கேட்ட சிவாஜி கணேசன் 'கதை பிடித்து இருக்கிறது. ஆனால் சொந்த வேலை காரணமாக நடிக்க முடியாது' என கூறிவிட்டாராம்.
நடிக்க முடியாது என முகத்திற்கு நேராக சொல்லாமல் அப்படி ஒரு காரணம் சொல்லி இருப்பாரோ என்னவோ.
அதற்கு பிறகு தான் பாலா ராஜ்கிரணை நடிக்க வைத்து இருக்கிறார்.