சிவகார்த்திகேயனுக்கு பிறந்த மூன்றாம் குழந்தை!! என்ன பெயர் தெரியுமா?
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர், அயலான் படத்தினை அடுத்து அமரன், SK23 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரித்து வரும் அமரன் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.
சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை 2010ல் திருமணம் செய்து ஆராதனா என்ற மகளையும் குகன் என்ற மகனையும் பெற்றெடுத்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் மனைவி 3வது முறை கர்ப்பமான விஷயம் வெளியாகி ஆண் குழந்தையும் பிறந்தது.
இன்று மகனுக்கு பெயர் சூட்டும் விழாவை மறைந்த தன் அப்பாவின் உருவ படத்தின் முன் நடத்தி இருக்கிறார். தனது மூன்றாவது குழந்தைக்கு பவன் என்ற பெயரை வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பெயர் வைத்த நிகழ்ச்சியின் வீடியோவை சிவகார்த்திகேயன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Aaradhana - Gugan - PAVAN ❤️❤️❤️ pic.twitter.com/T0YNorVIQb
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2024