சிவகார்த்திகேயன் படத்துக்கு வந்த சோதனை.. தமன் இசையை அட்டர் காப்பி அடித்த அனிரூத்...
தொலைக்காட்சி நட்சத்திரமாக இருந்து தன்னுடைய உழைப்பால் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து தற்போது டான், டாக்டர் என 100 கோடி வசூல் படங்களில் நடித்து கவர்ந்து வருகிறார்.
தற்போது மாவீரன், பிரின்ஸ் என்ற இரு படங்கள் உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் அனுதீப் கேவி இயத்தில் பிரின்ஸ் படம் விரைவில் தியேட்டரில் வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் இப்படத்தில் முதல் பாடலான பிம்பிலிக்கி பிளாப்பி என்ற பாடல் வெளியாகியது.
சிவகார்த்திகேயன் - அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான பல பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் இந்த பாடலும் வெளியான ஒரே நாளில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் குறையை கண்டுபிடித்து சிலர் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இப்பாடலின் இசை நடிகர் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமன் இசையில் வெளியான சர்கார் வாரிபாட்ட படத்தின் மா மா மகேஷா பாடலில் அமைந்ததை போல் இருக்கிறது. தமனை அப்படியே அனிருத் காப்பி அடித்துவிட்டாரே என்று நெட்டின்கள் கலாய்த்து வருகிறார்கள்.