முதல்பட சம்பளமே 20 ஆயிரம் தான்!! சிவகார்த்திகேயனின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய சிவகார்த்திகேயன்,3, ரஜினி முருகன், ரெமோ, மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், கனா, நம்ம வீட்டு பிள்ளை, டாக்டர், டான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்து பிஸி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
இடையில் வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல், ஹீரோ, பிரின்ஸ் போன்ற தோல்வி படங்களால் பல கோடி நஷ்டத்தை சந்தித்து வந்தார்.
இதை ஈடு செய்ய பல படங்களில் கமிட்டாகியதோடு 30 கோடி அளவில் தன் சம்பளத்தையும் உயர்த்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆரம்பகட்ட சினிமாவில் மெரினா படத்தில் வெறும் 20 ஆயிரம் சம்பளமாக பெற்று தற்போது கோடியில் சம்பளம் பெற்று மார்க்கெட் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற செய்தி வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் பல படங்களை தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அதன் அடிப்படையில் சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட 120 கோடி வரையில் சொத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.