கடனை அடைக்க முடியாமல் கடனாளியாகவே மாறும் சிவகார்த்திகேயன்.. அந்த வரிசையில் 5வது படம் இதுதான்..

Sivakarthikeyan Prince (2022)
By Edward Oct 23, 2022 01:09 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஷ்த்தை பெற்றவர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தில் ஆரம்பித்த லோ பட்ஜெட் மார்க்கெட் தற்போது 50 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் அளவிற்கும் 100 கோடி வசூல் குவிக்கும் அளவிற்கும் உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

டாக்டர், டான் படத்தின் 100 கோடி வசூலை தொடர்ந்து பிரின்ஸ், மாவீரன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது.

ரிலீஸான முதல் காட்சியிலேயே படும் ஓரளவிற்கு மட்டும் வரவேற்பு பெற்று வருகிறது. சர்தாருடன் இப்படி போட்டிப்போட்டு தோல்வியில் முடிந்துள்ளது. ஏற்கனவே கடன்களை அடைக்க சம்பளத்தை உயர்த்தி படாதபாடு பட்டும் கடின உழைப்பை கொடுத்து வருகிறார் சிவகர்த்திகேயன்.

இதில் அயலான் படம் வேற பணச்சிக்கலில் இருந்து தற்போது தான் மீண்டு வந்துள்ளது.

அப்படி கடனை அடைக்க முடியாமல் 5வது தோல்வி படங்களில் சேர்ந்திருக்கிறது பிரின்ஸ். காக்கி சட்டை, ஹீரோ, மிஸ்டர் லோக்கல், சீமராஜா போன்ற படங்களை தொடர்ந்து இப்படியொரு தோல்வியை கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மாவீரன் அயலான் படங்களாவது நல்ல கதையாக இருக்கட்டும் என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.