கோடி சம்பளம் வாங்கி என்ன பண்றது! சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடி கடனா?

doctor sivakarthikeyan debt
By Edward Jan 10, 2022 12:55 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக பணியாற்றிய மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் சிவகார்த்திகேயன். 3 படத்தில் காமெடியான நடித்து பிரபலமாகி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். தன்னுடைய மார்க்கெட் போகப்போக அதிகரித்து வந்ததால் கோடியில் சம்பளம் வாங்க ஆரம்பித்தார்.

பின் எஸ்கே என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து சில படங்களை தயாரித்தும் வந்த சிவகார்த்திகேயன், சீமராஜா, வேலைக்காரன் போன்ற படங்களால் அப்படத்தின் தாயாரிப்பாளருக்கு நஷ்டத்திற்கு காரணமாக அமைந்தார்.

அப்படங்களால் ஏற்பட்ட கடன் தொகை நாளுக்கு நாள் வட்டி, வட்டிக்கு வட்டி என செல்ல கடன் தொகையை நான் கட்டுகிறேன் என்று கூறியதுடன் அவருக்காக ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

இப்படியிருக்கையில், 72 கோடி ரூபாய் கடனை தானே ஏற்றுக்கொண்ட தொகையுடன் டாக்டர் படத்திற்காக 27 கோடி கடனிலும் இருந்துள்ளார். இதையும் சேர்த்து அவருக்கு மொத்த 97 கோடிக்கு மேல் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை சமாளிக்கத்தான் சிவகார்த்திகேயன் 35 கோடிக்கும் மேல் படத்தின் சம்பளமாக தெரிவித்துள்ளார். கடனை அடைக்க இந்த சம்பளத்தில் 5 படங்களுக்கு மேல் நடித்தால் தான் கடனை அடைக்கமுடியும் என்றும் கூறப்படுகிறது.