போச்சா? சூர்யா தனுஷ் எல்லாம் ஓரமா போங்க!! விஜய் அஜித்-க்கு அடுத்ததே சிவகார்த்திகேயன் தான்

Sivakarthikeyan Priyanka Arul Mohan Beast Don
1 மாதம் முன்
Edward

Edward

தன்னுடைய வளர்ச்சியால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்று கால் பதித்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 100 வசூலை பெற்றது.

இந்த ஆண்டு விஜய், அஜித் படங்கள் வசூலில் வெற்றிப்பெற்றாலும் கதை அளவில் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அதேபோல், சூர்யா, தனுஷ் படங்கள் கூட நல்ல வரவேற்பு பெறவில்லை.

அப்படியொரு நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13 ஆம்தேதி டான் படம் வெளியானது. முன்னணி நட்சத்திரங்களாக சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, ராதரவி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியது.

லைக்கா நிறுவனத்துடன் எஸ் கே பிரடக்‌ஷனும் இணைந்து தயாரித்திருந்தது. அனிரூத் இசையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில் இப்படம் மக்கள் மத்தியில் அப்பா மகன் உறவை பற்றி கூறி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

முதல் நாள் வசூலில் மொத்தம் 11 கோடியை அள்ளியது. மேலும் தமிழகத்தில் அஜித், விஜய்க்கு அடுத்தபடியான சிவகார்த்திகேயனின் டான் படம் தமிழகத்தில் மட்டும் 9 கோடியை பெற்றது.

இதிலிருந்து விஜய், அஜித்திற்கு அடுத்தபடியாக முதல் நாள் வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை சிவகார்த்திகேயனின் டான் படம் பெற்றுள்ளது. தற்போது வரையில் மொத்த வசூல் 52 கோடிக்கும் மேல் என கூறப்படுகிறது. அடுத்த வரும் வாரங்களில் 100 கோடியை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.